மாரியம்மன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி


மாரியம்மன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி

ஊட்டி,

கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இதையொட்டி தினமும் அய்யப்பன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. கார்த்திகை மாத சோமவார தினத்தையொட்டி (2-வது திங்கட்கிழமை) ஊட்டி மாரியம்மன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சியில் சிறிய, பெரிய விளக்குகள் அம்மன் சிலை முன்பு ஏற்றப்பட்டது. இதில் கோவில் தலைமை அர்ச்சகர் சரவணன், அர்ச்சகர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதினர். அதன் பின்னர் அங்குள்ள விநாயகர், முருகன், லட்சுமி, சிவன், காட்டேரி அம்மன் மற்றும் நவக்கிரகங்கள், கொடி மரம் முன்பு பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் நேற்று கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.


Next Story