நீலகிரி மாவட்டத்தில் எழுதப்படிக்க தெரியாத 4,098 பேருக்கு கற்றல் பயிற்சி வகுப்பு


நீலகிரி மாவட்டத்தில் எழுதப்படிக்க தெரியாத 4,098 பேருக்கு கற்றல் பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாத 4098 பேருக்கு கற்றல் பயிற்சி வகுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாத 4098 பேருக்கு கற்றல் பயிற்சி வகுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

தேசிய கல்விக் கொள்கை-2020 பரிந்துரைப்படி, வயது வந்தோருக்கான 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் 15 வயதுக்கு தாண்டிய கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தேசிய தகவல் மையம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம், தேசிய திறந்தவெளி பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் கல்வி முறை உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களும் உள்ளன. 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்துக்கான செலவினம் ரூ.1,038 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் பள்ளிக்கல்வித் துறை மூலமாக 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி கூறியதாவது:-

4098 பேர் அடையாளம்

நீலகிரி மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி இல்லாதவர்களாக ஊட்டி வட்டாரத்தில் 1100, குன்னூரில் 650, கோத்தகிரியில் 698 மற்றும் கூடலூரில் 1,650 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்டத்தில் 331 மையங்களில் தன்னார்வலர்கள் மூலம் கடந்த சில நாட்களாக கற்பித்தல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகிறது.

எழுத்தறிவில் அ, ஆ, ... உள்ளிட்ட உயிரெழுத்துக்கள் மற்றும் எண் அறிவில் 1 முதல் 1000 ஆயிரம் வரை கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கூடுதல் திறனாக அடிப்படை சட்டம் வாக்காளர் உரிமைகள் கடமைகள், உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கற்பிக்கப்படும்.

6 மாத கால பயிற்சி முடித்த பின்னர் அவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் பயிற்சி காலத்தில் அவர்களுக்கு கைத்தொழில் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story