சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கரூர் பசுபதிபாளையம் நகர்மன்ற நடுநிலைப்பள்ளியில் கடந்த 19-ந்தேதி முதல் வருகிற 25-ந்தேதி வரை கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் நேற்று பள்ளி மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பசுபதிபாளையம் நகர்மன்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். முடிவில் உதவி திட்ட அலுவலர் சத்யபாமா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.