அரசு பஸ்-லாரி மோதல்; 12 போ் படுகாயம்


அரசு பஸ்-லாரி மோதல்; 12 போ் படுகாயம்
x

சுவாமிமலை அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 12 போ் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

சுவாமிமலை அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 12 போ் படுகாயம் அடைந்தனர்.

பஸ்- லாரி மோதல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணத்தை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்ைச அரியலூர் மாவட்டம் வீரசோழபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன்(வயது 45) ஓட்டி வந்தார்.அந்த பஸ்சில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். சுவாமிமலை அருகே பரட்டை சாலையில் பஸ் வந்தபோது காரைக்காலில் இருந்து சுண்ணாம்பு கற்களை ஏற்றி வந்த லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

12 போ் படுகாயம்

இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை மாவட்டம் தேரழந்தூரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் வீனஸ்(34), பஸ் டிரைவர் பாலமுருகன் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story