லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்

பண்ருட்டி:

பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த அவுலியா நகர் 4-வது தெருவை சேர்ந்த ஜியாவுதீன் மகன் முகமது ரியாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த லாட்டரி சீட்டு, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story