தலைமை செயலாளர் இறையன்புக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு

தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
குற்ற வழக்குகளில் திறமையாக புலன் விசாரணை செய்வது பற்றி தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அண்மையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனையின்போது அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தார் தலைமை செயலாளர். இந்த நிலையில், 11 தாலுகாக்களில் சிறப்பு புலன் விசாரணை பிரிவுகள் அமைத்து தீவிர குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார் டிஜிபி.
அப்போது, அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு பாராட்டு தெரிவித்தது ஐகோர்ட். டிஜிட்டல் ஆதாரங்கள் விதிகள் வகுக்கும் நடைமுறை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணையின்போது தரத்தை மேம்படுத்துவது குறித்த வழக்கு ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு.