கூடலூர் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்திய மக்னா யானை-வாழை, மரவள்ளிக்கிழங்குகள் நாசம்


கூடலூர் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்திய மக்னா யானை-வாழை, மரவள்ளிக்கிழங்குகள் நாசம்
x
தினத்தந்தி 22 Feb 2023 12:00 AM IST (Updated: 22 Feb 2023 12:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வாழைக்கன்றுகள், பாகற்காய், மரவள்ளி கிழங்கு பயிர்களை மக்னா யானை சேதப்படுத்தியது. இதனால் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே வாழைக்கன்றுகள், பாகற்காய், மரவள்ளி கிழங்கு பயிர்களை மக்னா யானை சேதப்படுத்தியது. இதனால் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பயிர்களை சேதப்படுத்தியது

கூடலூர் பகுதியில் மக்னா காட்டு யானை ஒன்று சில மாதங்களாக ஊருக்குள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூர் அருகே புத்தூர் வயல் பகுதியில் மக்னா காட்டு யானை புகுந்தது.

பின்னர் அந்த பகுதியில் பயிரிட்டு இருந்த மரவள்ளி கிழங்கு, பாகற்காய் பயிர்களை சேதப்படுத்தியது.

இதேபோல் நூற்றுக்கணக்கான வாழைக்கன்றுகளை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியது. நேற்று காலை 7 மணி வரை அப்பகுதியில் நின்று விவசாய பயிர்களை நாசம் செய்தது. பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றது. இதனிடையே காட்டு யானையால் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

அதிருப்தி

இது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் கூறியதாவது:- மக்னா யானை ஒன்று கூடலூர் நகருக்குள் சுற்றி வந்த நிலையில் தற்போது சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. இதைப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் நடவடிக்கை எடுப்பதில்லை. இல்லையெனில் ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு யானை பிரச்சினைக்குரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் அதிருப்தியுடன் கூறினர்.


Next Story