மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கரூர்
மண்மங்கலம் கோட்டைமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினத்தில் இருந்து முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மகா மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story