மல்லாங்கிணறு பேரூராட்சி கூட்டம்


மல்லாங்கிணறு பேரூராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மல்லாங்கிணறு பேரூராட்சி கூட்டம்

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. தலைவர் துளசிதாஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மிக்கேல் அம்மாள், செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மல்லாங்கிணறு பேரூராட்சியில் நடந்து வரும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் மரக்கன்றுகள் நடுதல், சுகாதார மேம்பாட்டு பணிகள், நோய் தடுப்புக்கான இலவச பொது மருத்துவ முகாம்கள், பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மல்லாங்கிணறு சின்னக்குளம் ஊருணியை சுற்றி ரூ.2 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் தெரு மின்விளக்கு அமைத்தல், ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் காந்திநகர் ஊருணியை மேம்பாடு செய்தல், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் 40 வீடுகள் கட்டுவது குறித்தும், பேரூராட்சி பகுதியில் உள்ள 10 குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளை ரூ.1 லட்சம் செலவில் மராமத்து பணிகள் செய்வது, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2023-2024-ல் ரூ.2 கோடி 8 லட்சம் மதிப்பீட்டில் மேலரதவீதி, திம்மன்பட்டி, மல்லாங்கிணறு-கோவில்பட்டி வரை சாலை பகுதியில் சிறுபாலம், மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து மன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story