குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர் சாவு


குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர் சாவு
x

கூத்தாநல்லூரில் அருகே லெட்சுமாங்குடியில் இருந்து குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர் உயிரிழந்தார். அவரது சாவில் மா்மம் உள்ளதாக மனைவி கூறினார்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூரில் அருகே லெட்சுமாங்குடியில் இருந்து குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர் உயிரிழந்தார். அவரது சாவில் மா்மம் உள்ளதாக மனைவி கூறினார்.

குவைத்துக்கு சென்றார்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே, லெட்சுமாங்குடி, கொரடாச்சேரி சாலை மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்த ராஜப்பா. இவருடைய மகன் முத்துக்குமரன் (வயது40). இவர் கடந்த 3- ந் தேதி குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கிருந்து தொலைபேசியில் குடும்பத்தை தொடர்பு கொண்ட முத்துக்குமரன் வேலை கஷ்டமாக உள்ளதாக மனைவி வித்யாவிடம் கூறினார். இந்தநிலையில் குவைத்தில் வேலைக்கு சென்ற முத்துக்குமரன் இறந்து விட்டதாக நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு, லெட்சுமாங்குடியில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வேலை சிரமம்

இதனால், முத்துக்குமரனின் பெற்றோர், மனைவி, மகன்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், முத்துக்குமரனின் சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் கூறினர்.இது குறித்து முத்துக்குமரனின் மனைவி வித்யா கூறியதாவது:-எனது கணவர் முத்துக்குமரன் கடந்த 3- ந் தேதி குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றார்‌. அதன் பின்னர் 2 தடவை என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, வேலை கஷ்டமாக உள்ளதாகவும். என்னை ஒட்டகம் மேய்ப்பதற்கு பாலைவனத்தில் விட்டு விட்டார்கள். தங்கும் இடத்தில் மின் வசதி இல்லை. இதனால் மிகவும் சிரமத்தில் உள்ளதாக கூறினார்.இந்த நிலையில் எனது கணவர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. எனது கணவரை அடித்து துன்புறுத்தி, கொடுமை படுத்தி கொலை செய்து விட்டார்களோ? என்ற சந்தேகம் உள்ளது. அவர் முழு ஆரோக்கியத்துடன் குவைத் சென்று 7 நாட்களே ஆகிறது. அதற்குள் அவர் இறந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் சாவில் மர்மம் உள்ளது. எனவே மத்திய- மாநில அரசுகள் எனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story