கிருஷ்ணகிரியில் வருகிற 5-ந் தேதி 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்கம் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


கிருஷ்ணகிரியில் வருகிற 5-ந் தேதி 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்கம் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Jun 2023 1:15 AM IST (Updated: 29 Jun 2023 8:58 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வருகிற (ஜூலை) 5ம் தேதி தொடங்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆய்வு செய்தார்.

மாங்கனி கண்காட்சி

கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் தோட்டக்கலைத்துறை சார்பில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வருகிற ஜூலை 5-ந் தேதி தொடங்குகிறது.இதற்கான அரங்குகள், மேடை, தின்பண்ட கடைகள், விளையாட்டு திடல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இக்கண்காட்சிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை ஓட்டியவாறு, அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு, ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு

மேலும் பெங்களூரு சாலை வழியாக தனியார் மருத்துவமனை ஓட்டியும் ஏற்கனவே உள்ள பாதை வழியாக பொதுமக்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நோில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.


Next Story