அமுல் மூலம் ஆவினை காலி செய்ய பாஜக சதி - மாணிக்கம்தாகூர் குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகளாக ஆவினில் சீர்கேடு நிலவி வர அதிமுக அரசே காரணம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை,
விருதுநகர் தொகுதி எம்.பி.மாணிக்கம் தாகூர் கூறியதாவது:-
குஜராத்தின் அமுல் மூலம், தமிழ்நாட்டின் ஆவினை காலி செய்வதற்கும், அதன் உண்மையான வேர்களை அறுப்பதற்கும் பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளது உள்ளது. பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக சுற்றாத ஊரே கிடையாது; போகாத நாடே கிடையாது, அவர் பேசாத பேச்சே கிடையாது, மோடி வெளி நாடுகளுக்கு சென்று என்ன பெற்று வந்தார் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது. ஆவினை மேம்படுத்த புதிய அமைச்சராக பொறுப்பேற்த்துள்ள மனோ தங்கராஜ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்; கடந்த 10 ஆண்டுகளாக ஆவினில் சீர்கேடு நிலவி வர அதிமுக அரசே காரணம் என்றார்.
Related Tags :
Next Story