கோத்தகிரி கடைவீதியில் மாரியம்மன் கோவில் திருவிழா-கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் 20 நாட்கள் நடைபெறும் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் 20 நாட்கள் நடைபெறும் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மாரியம்மன் கோவில்
கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வருடம் தோறும் பல்வேறு சமூகத்தினரின் உபயத்தில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 5 மணிக்கு கணபதி வேள்வியும், 11.30 மணிக்கு காப்பு கட்டி கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜையும், மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பால்குட ஊர்வலமும், 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருவிளக்கு பூஜையும், அக்கினி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
2-ந்தேதி தீீர்த்தக்குட ஊர்வலம்
15-ந்தேதி (சனிக்கிழமை) கஞ்சி வார்த்தல், 16-ந் தேதி குன்னூர் ரோட்டில் உள்ள கன்னி மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் அழைப்பு நடக்கிறது. 17 -ந்தேதி அம்மன் காமதேனு வாகனத்திலும், 18-ந் தேதி யானை வாகனத்திலும், 19-ந் தேதி குதிரை வாகனத்திலும் அம்மன் திரு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 20 -ந்தேதி முதல் 28-ந்தேதி வரை பல்ேவறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
30-ந்தேதி ஆதிவாசிகள் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் அக்கினி கம்பம் திருவிடையாற்றல் நிகழ்ச்சியும், மே 1-ந் தேதி மஞ்சள் நீராடல் மற்றும் அம்மனை கரும்பாலம் ஆற்றில் திருவிடையாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது. 2 -ந் தேதி தீர்த்தக்குடங்கள் ஊர்வலம், தீர்த்தாபிஷேகம் மற்றும் மறு பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.