மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

தமிழக கவர்னர் ஆர். என் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திருமருகல் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநில பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலு நன்றி கூறினார்.


Next Story