தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை


தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை
x

சிவகாசி அருகே தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சாத்தூர்,

சிவகாசி அருகே நாரணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வபெருமாள் (வயது 46). மோட்டார் மெக்கானிக். இவர் வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் இருக்கன்குடி அணைக்கட்டு பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த இருக்கன்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்வபெருமாளின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story