மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்


மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
x

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். மேலும் முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கிக்கடனுக்கான பரிந்துரை கடிதங்களை வழங்கினார்.

முகாமில் 384 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 16 துறைகளின் வாயிலாக உரிய நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டி விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது.

சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், மணவாளன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஞானசேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story