அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் ஊர்வலம் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் மற்றும்அ.தி.மு.க சார்பு அணி நிர்வாகிகள் காந்திசிலையருகே கூடி அங்கிருந்து அண்ணாசிலை வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவி்ன் உருவ படங்களுக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன், தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு செயலாளர் மருதுஅழகுராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில், திருப்பத்தூர் தொகுதி செயலாளர் பத்மநாதன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், ஒன்றிய செலாளர்கள் நாகராஜன், சிவசுப்பிரமணியன், தேவேந்திரன், கணேசன், உதயகுமார், விஜயராஜ், சித்திரைச்செல்வம், செந்தில்குமார், முத்துக்குமார், பேரூர் செயலாளர்கள், சுப்பிரமணியன், ஜெயராமன், பாண்டி, கருப்பையா, ராமராஜூ, ராமகிருஷ்ணன், திருஞானம், ஆனந்தராஜ், பவானிசரவணன், மோகன், கணேசன், விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பத்தூர் நகர் செயலாளர் புதுத்தெரு முருகேசன் நன்றி கூறினார்.