இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 3:28 PM IST)
t-max-icont-min-icon

தொண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட துணை செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருவாடானை தாலுகாவில் உள்ள விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக கணினி திருத்தம் செய்ய கொடுத்த மனுக்கள் மீது இதுவரை வருவாய் துறை அதிகாரிகள் திருத்தம் செய்து கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கான கணினி திருத்தத்தை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். திருவாடானை தாலுகாவில் உள்ள ஊருணி, கண்மாய்களை நிரப்ப வரத்து கால்வாய்களை தூர்வார தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story