ஊராட்சி தலைவருக்கு பதிலாக, திட்டபயனாளிகளில் ஒருவர்தான் தலைமைதாங்க வேண்டும்


ஊராட்சி தலைவருக்கு பதிலாக, திட்டபயனாளிகளில் ஒருவர்தான் தலைமைதாங்க வேண்டும்
x

சமூக தணிக்கை கிராமசபை கூட்டங்களுக்கு ஊராட்சி தலைவருக்கு பதிலாக, திட்டபயனாளிகளில் ஒருவர்தான் தலைமைதாங்க வேண்டும் என்று உடுமலையில் நடந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி தெரிவித்தார்.

திருப்பூர்


சமூக தணிக்கை கிராமசபை கூட்டங்களுக்கு ஊராட்சி தலைவருக்கு பதிலாக, திட்டபயனாளிகளில் ஒருவர்தான் தலைமைதாங்க வேண்டும் என்று உடுமலையில் நடந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி தெரிவித்தார்.

விளக்க கூட்டம்

உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், சமூக தணிக்கை மேற்கொள்வதில் ஊராட்சிகளின் பொறுப்புகள் குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான விளக்கக்கூட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் நடந்தது. உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மு.கந்தசாமி தலைமை தாங்கி பேசினார். ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கே.ஏ.சண்முகவடிவேல் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சமூக தணிக்கை மேற்கொள்வதில் ஊராட்சியின் பொறுப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

அதன் விபரம் வருமாறு:-

கிராம ஊராட்சியில் பராமரிக்கப்படும் விண்ணப்பப்பதிவு மற்றும் வேலை அட்டை வழங்கும் பதிவேடு, வரவு, செலவு பதிவேடு, குடும்பவாரியாக வேலை வழங்கும் பதிவேடு, வேலைஅட்டை இருப்புப்பதிவேடு, சொத்துப்பதிவேடு, புகார் பதிவேடு, தொடர்புடைய பணிக்கோப்புகள், பணிமாற்ற ஆவணங்கள், பொருட்கள் வாங்கியதற்கான செலவு சீட்டுகள் ஆகிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் சமூக தணிக்கைக்கு தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்யவேண்டும்.

ஊராட்சியில் சமூக தணிக்கை நடைபெற தகுந்த சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். ஊராட்சி மன்ற அலுவலகத்தை தவிர்த்து ஊராட்சிக்கு மையமாக உள்ள பொதுநூலகம், கிராம சேவை மையம், மகளிர் சுய உதவி குழு கட்டிடம், சமுதாய கூடம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் ஏதாவது ஒன்றை சமூக தணிக்கை மேற்கொள்ள வழங்கவேண்டும்.

சமூக தணிக்கை நடைபெறும் முதல்நாள் காலை அறிமுக கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர், பணித்தளபொறுப்பாளர்கள், சமூக நல ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழு பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து கூட்டம் நடைபெற வழிவகை செய்யவேண்டும்.

சமூக தணிக்கை கிராம சபை நடைபெறும் இடம் மற்றும் நாள் ஆகியவற்றை கிராம சபை நடைபெறும் நாளுக்கு முன்னரே ஊராட்சியின் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும்.சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் வகையில் நிழற்கூட வசதி உள்ள இடத்தை தேர்வு செய்யவேண்டும்.ஒலிபெருக்கி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திதரவேண்டும்.

பயனாளி தலைமை

சமூக தணிக்கை கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் தலைமை தாங்க கூடாது. அவருக்கு பதில், கூட்டத்திற்கு வருகை தந்த திட்ட பயனாளிகளில் ஒருவர் தலைமை தாங்க வேண்டும். சமூக தணிக்கை கிராம சபை நடவடிக்கைகளை ஊராட்சி செயலாளர் பதிவு செய்யக்கூடாது. அவருக்கு பதில், கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்களில் ஒருவர் கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்யவேண்டும்.

சமூக தணிக்கையின்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார், கோரிக்கை மனுக்களான புதிய வேலை அட்டைவழங்குதல், அட்டை புதுப்பித்தல், வேலை வழங்குதல் உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டன.

வடகிழக்கு பருவமழை

இதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.


Related Tags :
Next Story