ஏரல் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கு போட்டு இறந்து போனார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கு போட்டு சாவு
தூத்துக்குடி
ஏரல்:
ஏரல் அருகே உள்ள மாரமங்கலம் தீப்பாச்சி சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 50). இவர் 10 வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று காலையில் இயற்கை உபாதையை கழிப்பதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. அவரது மகன் சஞ்சய் தேடி சென்று உள்ளார். அப்போது அவர் இரட்டை மாத சுடலை சுவாமி கோவில் அருகே உள்ள வேப்ப மரத்தில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் மூலம் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
Related Tags :
Next Story