வியாபாரிகள் கடையடைப்பு


வியாபாரிகள் கடையடைப்பு
x

வள்ளியூர் பஸ் நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் பஸ் நிலையத்தை இடித்து அகற்றி விட்டு, புதிதாக ரூ.12.13 கோடியில் நவீனமயமாக்கப்பட்ட பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. இதையொட்டி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

தொடர்ந்து நவீனமயமாக்கப்பட்ட பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வள்ளியூர் பஸ் நிலைய வியாபாரிகள் நேற்று தங்களது கடைகளை அடைத்தனர். பஸ் நிலைய வளாகம் வெறிச்சோடியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.


Next Story