கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

தாராபுரம் அருகே நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.
தாராபுரம் அருகே நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.
இலவச மருத்துவ முகாம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தமிழக அரசின் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ அலங்கியம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமுக்கு வட்டார மருத்துவர் டாக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தேவிகுப்பு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் உடல்நிலையை இலவசமாக மருத்துவபரிசோதனை செய்து கொள்ளலாம். அதேபோன்று கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற நாள் முதல் பிரசவம் வரை தவறாமல் மருத்துவரின் ஆலோசனையும் மருத்துவ பரிசோதனையும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். மேலும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து வகை சிகிச்சை
முகாமில் பொது மருத்துவம், இருதய நோய் சிகிச்சை, பல் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கண்சிகிச்சை, கிச்சை புற்றுநோய், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், சித்த மருத்துவம், சிறுநீரகம் பரிசோதனை, ஈசிஜி, ஸ்கேன், தோல் மருத்துவம் உள்ளிட்ட நோய்கள் குறித்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் பொன்னாவரம், அலங்கியம், தாராபுரம் தளவாய்பட்டினம் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் முகாமில் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தனர்.பிறகு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமிற்கு ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன் மற்றும்தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அமுதவல்லி, ஊராட்சி செயலாளர் ரவி, கிளை செயலாளர்கள் கருணாநிதி, ஜெயசீலன், பரமசிவம், சுகாதார ஆய்வாளர்கள் ராஜ், நவீன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தமிழ்மாறன், ராஜன் சுகாதார பணியாளர்கள் கொண்டனர். வட்டார சுகாதார மேற்பரையாளர் சவுந்தர்ராஜ் நன்றி கூறினார்.