மழையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு


மழையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு
x

தியாகதுருகம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகம் அருகே பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் மழை நீர் புகுந்து மாணவர்களின் நோட்டுகள், கல்வி உபகரணங்கள் நனைந்து சேதமானது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட அலுவலர் கலைச்செல்வன், வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், புதிய கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக மாரியம்மன் கோவில் வளாகத்தில் வகுப்பு நடத்த உத்தவிட்டனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் சென்று பள்ளியை ஆய்வு செய்து, மாணவர்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர், பள்ளி கட்டிட சேதம் குறித்தும், தற்காலிக இடத்தில் போதுமான இட வசதி உள்ளதா?, மின்சார வசதி உள்ளதா? என்பது குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆய்வின்போது அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன், துணை தலைவர் அருள் மணிவண்ணன், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள் குமார், செல்லமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story