மின்விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி


மின்விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி
x
தினத்தந்தி 30 Oct 2022 12:45 AM IST (Updated: 30 Oct 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

மின்விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் அபிமணி (வயது21). இவர் கடந்த மே மாதம் 10-ந் தேதி அதிகாலை வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் நடந்து சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு தமிழக மின்சாரத்துறை சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சீர்காழி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மின்விபத்தில் உயிரிழந்த அபிமணியின் தந்தை செல்வகுமாரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி, உதவி மின் பாதை பொறியாளர் ரங்கராஜன், சீர்காழி தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்ரவேலு, பெரியசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story