மோர்தானா அணை பகுதி கிராமத்தில் எரிந்த நிலையில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

மோர்தானா அணை வனப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்
மோர்தானா அணை வனப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மோர்தானா அணை பகுதி கிராமத்தில் எரிந்த நிலையில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
எரிந்த நிலையில் பிணம்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அணை தமிழக- ஆந்திர எல்லையோரம் உள்ளது. இந்த அணைக்கு சைனகுண்டா-மோர்தானா கூட்ரோட்டில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் செல்ல வேண்டும். வழி நெடுக அடர்ந்த வனப்பகுதி உள்ள இடத்தில் ஜங்காலபல்லி என்ற ஒரே ஒரு கிராமம் மட்டும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலையில் ஜங்காலபல்லி கிராமம் அருகே உள்ள கன்னி கோவில் வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் சற்று தொலைவில் புகை வந்ததை கவனித்து அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது ஒரு ஆண் முதுகு, முகம் சிறிதளவு எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், பழனி, தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர்.
யார் அவர்?
அங்கு சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பேண்ட் சட்டை அணிந்த நிலையில் கிடநற்த பிணத்தை கைப்பற்றினர். பிணமாக கிடந்தவரின் முதுகு பகுதி எரிந்து நிலையிலும் முகம் ஆங்காங்கே கருகிய நிலையிலும் இருந்தது. சம்பவ இடத்தில் சற்று தொலைவில் 2 மது பாட்டில்கள் இருந்துள்ளன.
போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மது குடித்தபோது தகராறில் கொலையா?
இது குறித்து துப்பு துலக்குவதற்காக சைனகுண்டா பகுதியில் உள்ள காவல்துறையினரின் சோதனை சாவடி மற்றும் அப்பகுதியில் மதுக்கடையில் உள்ள பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் அதன் பதிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
மோர்தானா அணைக்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலர் சுற்றுலா போல் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் சிலர் வனப்பகுதியில் அமர்ந்து மது குடித்துவிட்டு செல்கின்றனர்.
மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்து விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க பிணத்தை எரித்த நிலையில் ஆடு மேய்த்தவர்கள் வருவதற்குள் தப்பி ஓடிவிட்டார்களா அல்லது வெளியே எங்கேயாவது கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருக்க மோர் தானா வனப்பகுதியில் பிணத்தை எரிக்க முயற்சித்தார்களா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மேலும் இறந்து போன ஆண் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.