டிரைவர் கவனிக்காமல் எடுத்ததால் விபரீதம்- லாரிக்கு அடியில் தூங்கிய கிளீனர் நசுங்கி பலி


டிரைவர் கவனிக்காமல் எடுத்ததால் விபரீதம்- லாரிக்கு அடியில் தூங்கிய கிளீனர் நசுங்கி பலி
x

டிரைவர் கவனிக்காமல் எடுத்ததால் லாரிக்கு அடியில் தூங்கிய கிளீனர் உடல் நசுங்கி பலியானார்

மதுரை

திருமங்கலம்

திருமங்கலத்தில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் பர்னிச்சர் பொருட்களை இறக்குவதற்காக கன்டெய்னர் லாரி ஒன்று ராஜஸ்தானிலிருந்து வந்தது. பர்னிச்சர் கடை 10 மணிக்கு மேல் தான் திறக்கப்படும் என்பதால் திருமங்கலம் நகருக்கு வெளியில் ஒதுக்கு புறமாக லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் ஜாபர்(27), கிளீனர் குவாரிஷ் (25) ஆகியோர் லாரிக்குள் உறங்கினர். அவருடன் வந்த மற்றொரு கிளீனர் தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ்(52) அசதியாக இருந்ததால் லாரிக்கு அடியில் படுத்து உறங்கி உள்ளார். இதனை அறியாத டிரைவர் ஜாபர் வாகனத்தை இயக்கினார். இதில் பின்பக்க டயர் பால்ராஜ் தலையின் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story