கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
ஜோலார்பேட்டை
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காளிநாயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வேடி (25), முனுசாமியின் மகள் சாதனா (32) மற்றும் அன்பு (25) ஆகிய 3 பேரையும் மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த கார் வளைவதற்காக திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதால் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியது இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 4 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
இதில் வேடி, சந்தோஷ்குமார், சாதனா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அன்பு காயமின்றி உயிர்தப்பினார். படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேடி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் காளியப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.