மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் விழா


மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் விழா
x

மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது

மதுரை


மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து, பிப்ரவரி 4-ந் தேதி தெப்ப உற்சவமும் விமரிசையாக நடக்கிறது. இந்தநிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழாவிற்காக மாரியம்மன் தெப்பக்குளத்தில் நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில், துணை கமிஷனர் அருணாச்சலம் உள்பட கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story