நகர் ஊரமைப்பு அலுவலகத்தை முற்றுகை


நகர் ஊரமைப்பு அலுவலகத்தை முற்றுகை
x

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகன மெக்கானிக்குகள் நகர் ஊரமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் இருசக்கர வாகன மெக்கானிக்குகள் நகர் ஊரமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விண்ணப்பம்

ராமநாதபுரம் மாவட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் அந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ள 130 பேருக்கும் வீட்டுமனை வழங்குவதற்காக குயவன்குடி பகுதியில் 4½ ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலத்திற்கு வடிவ ஊரமைப்பு செய்வதற்காக மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் அந்த சங்கத்தினர் விண்ணப்பித்து உள்ளனர்.

ஆனால் அதில் குறைபாடு உள்ளதால் சரிசெய்து வழங்கு மாறு மெக்கானிக்குகள் கேட்டு உள்ளனர். இதற்கு நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனர் ஒப்புதல் அளிக்காமல் திட்டமிட்டு இழுத்தடிப்பதாக மெக்கானிக்குகள் புகார் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை கேணிக்கரை பகுதியில் உள்ள மேற்கண்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட மெக்கானிக்குகள் லஞ்சம் கேட்டு தராததால் தங்களின் நிலத்திற்கு ஒப்புதல் வழங்காமல் உள்ளதாக தங்களின் தரப்பு நியாயத்தை கூறி கோஷமிட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தங்களின் நிலத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்நோக்கத்துடன் காலம் தாழ்த்தி பிரச்சினை செய்வதாக மெக்கானிக்குகள் புகார் தெரிவித்தனர்.

தன்னை முற்றுகை யிட்டு பணி செய்யவிடாமல் தடுத்து பிரச்சினை செய்வ தாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து நடவடிக்கை எடுக்குமாறும் உதவி இயக்குனர் புகார் கூறினார். இருதரப்பினரும் புகார் அளிக்குமாறு கூறி போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story