காங்கிரஸ் சார்பில் தேசிய கொடி பாதயாத்திரை

காங்கிரஸ் சார்பில் தேசிய கொடியுடன் பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
திருநெல்வேலி
இந்திய நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய கொடி பாதயாத்திரை நிறைவு விழா நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை நடைபெற்றது. மேலப்பாளையம் குறிச்சி முக்கில் இருந்து புறப்பட்டு அழகிரிபுரம், வசந்தாபுரம் வழியாக தெற்கு புறவழிச்சாலையில் நிறைவடைந்தது.
இந்த பாதயாத்திரையை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story