தேவதானப்பட்டி அருகேதனியார் நிறுவன ஊழியரை தாக்கி நகை பறிப்பு

தேவதானப்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி நகையை பறித்த சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி
தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கனவா பீர் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இவர், தன்னுடன் பணிபுரியும் சிந்துவாடன்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரிடம் பணம் கொடுப்பதற்காக சென்றார். அங்கு அவர் அந்த பெண்ணிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த அயல் சாமி (30), விஜயன் (32) ஆகிய இருவரும் கனவா பீரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த 2 பவுன் சங்கிலி, 2 பவுன் மோதிரத்தை பறித்து சென்று தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் கனவா பீர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story