எட்டயபுரம் அருகே ஜின்னிங் பாக்டரியில் தீ விபத்து

எட்டயபுரம் அருகே ஜின்னிங் பாக்டரியில் தீ விபத்து ஏற்பட்டது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள சுரைக்காய்பட்டி பகுதியில் காமராஜ் என்பவருக்கு சொந்தமான ஜின்னிங் பாக்டரி செயல்பட்டு வருகிறது. இங்கு பருத்தியிலிருந்து பருத்தி விதை மற்றும் பஞ்சுகளை எந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.நேற்று ஊழியர்கள் வழக்கம்போல் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் பஞ்சு பிரித்தெடுக்கும் எந்திரத்தில் திடீரென தீப்பொறி உருவாகி பருத்தி மூட்டைகள் மற்றும் பஞ்சுகளில் தீப்பற்றி எரிந்தது.
இதனால் பதறிப்போன ஊழியர்கள் வெளியேறிஉயிர் தப்பினர். தீ மளமளவென பரவியதில் பஞ்சு மூட்டைகள், எந்திரங்களிலும் பற்றி எரிந்தது. தகவல் அறிந்தவுடன் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். ஆனாலும், தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகளும், எந்திரங்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.