கயத்தாறு அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி சாவு
கயத்தாறு அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே வாகன விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக பலியானார். விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட தொழிலாளி
செய்துங்கநல்லூர் கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முருகன் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் தந்தை ராமச்சந்திரன் வசித்து வீட்டிற்கு விருதுநகர் சூலக்கரை அருகே உள்ள சின்னதாளம்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து மீண்டும் நேற்று இரவு செய்துங்நல்லூருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துகொண்டிருந்தார். கயத்தாறு அருகே கரிசல்குளம் நாற்கர சாலையில் வந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் ஒன்று முருகன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
சம்பவ இடத்திலேயே சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலிப் சம்பவ இடத்துக்கு சென்று, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மோதிய வாகனம் எங்கே?
மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன முருகனுக்கு பிச்சம்மாள் என்ற மனைவியும், பேச்சியம்மாள்( 16),முனீஸ்வரி( 12) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.ம் உள்ளனர்.