கோவில்பட்டி அருகே ரூ.9 லட்சம் செலவில் 2 மின்மாற்றிகள் திறப்பு


கோவில்பட்டி அருகே  ரூ.9 லட்சம் செலவில் 2 மின்மாற்றிகள் திறப்பு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே ரூ.9 லட்சம் செலவில் 2 மின்மாற்றிகள் திறப்புவிழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே கட்டாரங்குளம் பஞ்சாயத்து சரவணபுரம் கிராமத்தில் 150 குடியிருப்புகளுக்கு சீரான மின் விநியோகம் செய்வதற்காக ரூ.9 லட்சம் செலவில் 2 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மின் மாற்றிகளை இயக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு.சகர்பான், உதவி பொறியாளர்கள் குருசாமி, மிகாவேல், முனியசாமி, பொன்ராஜ், அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story