நம்பியூர் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நம்பியூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள புதுஅய்யம்பாளையத்தை சேர்ந்தவர் நவீன்ராஜ் (வயது 35) கூலித்தொழிலாளி. கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு கட்டிட வேலை செய்யும்போது நவீன்ராஜ் கீேழ விழுந்துவிட்டார். இதில் முதுகு தண்டில் அவருக்கு காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். எனினும் குணமாகாததால் சித்த மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் நாள்தோறும் அவர் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விட்டத்தில் தூக்குப்போட்டு தொங்கினார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த நவீன்ராஜின் தாய் அலறி துடித்து மகனை காப்பாற்றுவதற்காக, தூக்கு கயிற்றை அரிவாளால் அறுத்துள்ளார். அப்போது கீழே விழுந்ததில் நவீன்ராஜ்க்கு தலையிலும் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்சை வரவழைத்து, கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.