சத்தியமங்கலம் அருகே வாகனம் மோதி மான்குட்டி சாவு Mankutty death in vehicle collision

வாகனம் மோதி மான்குட்டி சாவு
சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் பாதையில் சிக்கரசம்பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மான்குட்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மான்குட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மான்குட்டி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று, மான்குட்டியை மீட்டு சிகிச்சைக்காக காராச்சிகொரையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கே டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி மான்குட்டி இறந்து விட்டது. இறந்தது ஆண் மான் குட்டி. பிறந்து சுமார் 8 மாதமே ஆகி இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மான்குட்டி மீது மோதிய வாகனம் பற்றி வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.