நேதாஜி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்


நேதாஜி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
x

நேதாஜி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ராமநாதபுரம்


ராமநாதபுரம் பாரதிநகரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பு செயலாளர் வீரப்பெருமாள், முதன்மை செயலாளர் தீபக், நிதி செயலாளர் பாரதி ஆகியோர் தலைமை தாங்கினர். துணை தலைவர்கள் சுப்பிரமணியன், வெங்கடாசலம், துணை செயலாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவரணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளரும், சிவகங்கை மாவட்ட பொதுச்செயலாளருமான யோகநாதன், முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் பொன்.முத்துராமலிங்கம், கவிஞர் வதிலை செந்தில், நேதாஜி சமூக நல அறக்கட்டளை தலைவர் ஜோதிபாசு, வெள்ளாளர் முன்னேற்ற சங்க தலைவர் வன்னியபிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், சுதந்திர போராட்டம் குறித்து நேதாஜி தேசிய பேரவை தலைவர் சுவாமிநாதன் பேசினார். கூட்டத்தில் ராமநாதபுரம் இளைஞரணி தலைவர் தமிழரசன், முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் பூமணி, சாயல்குடி ஒன்றிய செயலாளர் துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வாசுதேவன் நன்றி கூறினார்.


Next Story