புதிய ஆழ்துளை கிணறு, நவீன கழிப்பறை திறப்பு


புதிய ஆழ்துளை கிணறு, நவீன கழிப்பறை திறப்பு
x

புதிய ஆழ்துளை கிணறு, நவீன கழிப்பறையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிணறு மற்றும் நவீன கழிப்பறை கட்டிடத்தின் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு தொகுதி ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவன் டாக்டர் பவளக்கொடி சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story