ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்


ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்
x

மூலைக்கரைப்பட்டி அருகே ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி நாகல்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதையடுத்து குழந்தைகளின் நலன் கருதி, அங்கு பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன், பேரூராட்சி கவுன்சிலர் மரியசாந்தி தலைமை ஆசிரியர் வனிதா, உதவி ஆசிரியர் முத்துச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் களக்காடு இடையன்குளத்தில் நடந்த விழாவில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அறிவியல் கல்வி மையத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.


Next Story