தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை
திருமணமான 2 மாதத்தில் தூக்குபபோட்டு புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப பிரச்சினை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை சேர்ந்தவர் மாணிக்கராஜா (வயது 25). இவர் அதே பகுதியில் மரப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த தீபா (20) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி 2 மாதமே ஆன நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை இருந்தது.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று காலை மாணிக்கராஜா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தீபா மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கியதை கண்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தீபாவை, மாணக்கராஜ் மீட்டு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீபாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
உதவி கலெக்டர் விசாரணை
இதுகுறித்து தீபாவின் தாயார் கற்பகம், எனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தீபாவுக்கு திருமணமாகி 2 மாதமே ஆவதால் கும்பகோணம் உதவி கலெக்டர் பூர்ணிமா விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.