புதிய பகுதி நேர ரேஷன் கடை

திண்டிவனம் 24-வது வார்டில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.
விழுப்புரம்
திண்டிவனம்:
திண்டிவனம் 24-வது வார்டில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திண்டிவனம் தாசில்தார் அலெக்சாண்டர், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கூட்டுறவு சார்பதிவாளர் திருமுருகன், மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் டாக்டர் சேகர், திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், துணை செயலாளர் கவுதமன், மரக்காணம் ஒன்றியக்குழு துணை தலைவர் பழனி, கவுன்சிலர்கள் ராம்குமார், சந்திரன், வார்டு கிளை செயலாளர்கள் சுதர்சனன், கோபாலபுரம் செந்தில்குமார், அவைத்தலைவர் அன்பழகன், மேலவை பிரதிநிதிகள் செந்தில்நாதன், ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story