ரூ.22 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம்

கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் ரூ.22 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் ; அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
திருவிடைமருதூர்:
கும்பகோணம் தொகுதி, பழவாத்தான்கட்டளை ஊராட்சி, முத்துபிள்ளைமண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கும்பகோணம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.22 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடத்தை, அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கும்பகோணம் ஒன்றிய துணைத்தலைவர் கணேசன், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முரளி ஜெகதீசன், மார்க்கெட் சங்கர், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நீலமேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, ஆனந்தராஜ், உதவி பொறியாளர் அய்யப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளை தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.