அண்ணாமலையார் கோயில் அருகே அசைவ உணவகங்கள் - கவர்னர் ஆர்.என்.ரவி வருத்தம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை சுற்றி உள்ள அசைவ உணவகங்களை பார்த்து வருத்தமடைந்தேன் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கு நேற்று சென்றார். இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை சுற்றி உள்ள அசைவ உணவகங்களை பார்த்து வருத்தமடைந்தேன் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மேலும் உணவு ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் ,பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் .பக்தர்களும் தங்களது வேதனையை பகிர்ந்து கொடண்டனர். திருவண்ணாமலை கோயில் , கிரிவல பாதையில் பகுதிகளில் போதிய கழிவறை இல்லாததை பார்த்தேன்.என ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story