மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில டிரைவர் பலி


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில டிரைவர் பலி
x

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில டிரைவர் பலி

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி பாலம் பகுதியில் சாலையோரம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வாலிபர் ஒருவர் உடலில் பலத்த காயத்துடன் கிடந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதலில் இறந்தவரின் பெயர், ஊர் விவரங்கள் தெரியாமல் இருந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த அந்தாநர்சரி (வயது25) என்பது ெதரிய வந்தது. இவர் குமரி மாவட்டத்தில் தோட்டியோடு பகுதியில் உள்ள ஒரு பன்றி பண்ணையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வில்லுக்குறி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று ெகாண்டிருந்தபோது மின்கம்பத்தில் மோதி இறந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story