வடமாநில வாலிபர் சுருண்டு விழுந்து சாவு

திருப்பத்தூரில் வடமாநில வாலிபர் சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் டவுன் திருவண்ணாமலை மெயின் ரோடு பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து தலையில் அடிபட்டு இறந்து கிடப்பதாக டவுன் போலீசாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று இறந்து கிடந்த வாலிபரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் சுருண்டு விழுந்த இறந்த வாலிபர் மேற்குவங்காள மாநிலம் திபெத்து பகுதியைச் சேர்ந்த சுக்கும்பார்டின் மகன் பால்டன்டின் (வயது 22) என்பதும், நேற்று முன்தினம் திருப்பத்தூரில் அவரது நண்பர்கள் கட்டிட பணியில் கம்பி கட்டும் பணி செய்து வருவதும், அவர்களுடந்சேர்ந்து வேலை செய்வதற்காக ரெயிலில் வந்ததும் தெரியவந்தது. நேற்று முன் தினம் இரவு முழுவதும் மதுகுடித்து உள்ளார். நேற்று காலை பணி செய்து கொண்டிருந்தபோது வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் சுருண்டு விழுந்து இதில் தலையில் அடிபட்டது தெரிய வந்தது.
இது குறித்து கட்டிட என்ஜினீயர் பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.