விழுப்புரம் ரெயில் நிலையத்தில்வடமாநில வாலிபர் ரகளைபயணிகளை தாக்கியதால் பரபரப்பு

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் பயணிகளை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நேற்று சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பேண்ட் மட்டும் அணிந்திருந்த நிலையில் சட்டை அணியாமல் குடிபோதையில் அங்கும், இங்குமாக சுற்றிக்கொண்டிருந்தார். அவர், ரெயில் நிலையத்திற்கு வந்து சென்ற பயணிகளை ஆபாசமாக திட்டியதோடு அடாவடியான செயல்களிலும் ஈடுபட்டார். மேலும் பயணச்சீட்டு எடுக்க வரிசையில் நின்றுகொண்டிருந்த பயணிகளிடம் சென்றும் ரகளையில் ஈடுபட்டு அவர்களில் சிலரை கையால் தாக்கினார்.
இதுகுறித்து பயணிகள், விழுப்புரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார், அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story