'ஆக்கிரமிப்பு வக்பு வாரிய சொத்துகள் மீட்கப்படும்'- தலைவர் அப்துல்ரகுமான் பேட்டி


ஆக்கிரமிப்பு வக்பு வாரிய சொத்துகள் மீட்கப்படும்- தலைவர் அப்துல்ரகுமான் பேட்டி
x

‘ஆக்கிரமிப்பு வக்பு வாரிய சொத்துகள் மீட்கப்படும் என்று தலைவர் அப்துல்ரகுமான் பேட்டி அளித்தார்.

சிவகங்கை

மானாமதுரை

இளையான்குடி சமூக நீதி பேரவையின் சார்பில் அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி மானாமதுரையில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை தமிழக வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக கவர்னர் ரவிக்கு தமிழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன அர்த்தம் என்று தெரியாது. இதுபோன்று தெரியாத விஷயங்களை அடிக்கடி சொல்லி சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். இது அவரது பதவிக்கு அழகல்ல. பா.ஜ.க. தொடர்ந்து தமிழகத்தில் கவனம் செலுத்தி வருவதை வரவேற்கிறோம். இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருவது போல் வக்பு வாரிய சொத்துக்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். முன்னதாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளை அவர் பார்வையிட்டார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் முருகேசன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி மற்றும் துணைத்தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story