சோதனை சாவடியில் அதிகாரிகள் வாகன தணிக்கை


சோதனை சாவடியில் அதிகாரிகள் வாகன தணிக்கை
x

சேர்க்காடு சோதனை சாவடியில் அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

வேலூர்

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சேர்க்காடு சோதனைசாவடியில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற லாரிகள், பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்தனர். இந்த சோதனை அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story