பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு

திருவட்டார் அருகே பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு ெசய்தனர். அப்போது சாலை பணி தரமான முறையில் ேமற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு ெசய்தனர். அப்போது சாலை பணி தரமான முறையில் ேமற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.
சாலை பணி தடுத்து நிறுத்தம்
குலசேகரம் நாகக்கோடு முதல் திருவரம்பு மாறப்பாடி வரையிலான 4 கிலோ மீட்டர் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்காக திருவட்டார் அருகே திருவரம்பு குருசடி முதல் அரமன்னம் வரை சாலையோரம் 2½ ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் தரமற்ற பாறை பொடியை நிரப்ப முயன்றனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர். அதோடு நாகர்கோவில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவுபடி பள்ளத்தில் கொட்டப்பட்ட மோசமான பாறை பொடி திரும்ப எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வை மேற்கொண்டார். தொடர்ந்து சாலை பணியை தரமான முறையில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் போனில் கேட்டுக்கொண்டார்.
அதிகாரிகள் ஆய்வு
இதை தொடர்ந்து நேற்று காலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திருவரம்பு பகுதிக்கு வந்து சாலைைய ஆய்வு செய்தனர்.
அவர்களிடம் காங்கிரஸ் திருவட்டார் கிழக்கு வட்டார தலைவர் ஜெபா, மேற்கு வட்டார தலைவர் வினுட்ராய், பெகின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி எட்வின் ராஜ், மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தரமான பாறை பொடியால் பள்ளத்தை நிரப்ப வேண்டும். சரியான விகிதத்தில் கான்கிரீட் கலவையை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், தரமான முறையில் பணிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து பணிகள் மீண்டும் தொடங்கின.