கோவில் கட்டிடம் இடிந்து வகுப்பறை மீது விழும் அபாயம்மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தைசெஞ்சி அருகே பரபரப்பு


கோவில் கட்டிடம் இடிந்து வகுப்பறை மீது விழும் அபாயம்மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தைசெஞ்சி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே கோவில் கட்டிடம் இடிந்து வகுப்பறை மீது விழும் அபாயம் உள்ளதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே வல்லம் ஒன்றியம் குறிஞ்சிப்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் அருகே உள்ள பழமைவாய்ந்த பட்டாபிராமர் கோவில் கருங்கல் கட்டிடம் இடிந்து பள்ளி வகுப்பறை மீது விழும் நிலையில் உள்ளது. இதனால் பள்ளியின் ஒருபகுதியில் உள்ள 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் மூடப்பட்டது. அந்த வகுப்பறைகளில் படித்த மாணவர்கள் வேறு கட்டிடத்தில் படித்து வருகிறார்கள்.

இருப்பினும் எந்த நேரத்திலும் 12 அடி உயரம் கொண்ட கோவில் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட முடிவு செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்ததாஸ், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி செல்வராஜ் ஆகியோர் விரைந்து வந்து பள்ளி, கோவில் கட்டிடங்களை பார்வையிட்டு, மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறுதியளித்தனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி அருகே உள்ள பாழடைந்த கோவில் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாலும், அங்கு விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதாலும் மாணவர்கள் அச்சத்துடன் படித்து வருகிறார்கள். இதுபற்றி கடந்த 2 ஆண்டு்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை. ஆகவே கோவில் கட்டிடத்தை சீரமைக்க வில்லை என்றால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்துவதுடன் கிராம மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story